மலையாள நடிகர் உன்னி முகுந்தன் தற்போது சானக்கிய தந்திரம் என்ற படத்தில் நடித்து வருகிறார். அந்த படத்தில் பெண்ணாக நடிக்கிறார். நடிகை அனுஷ்கா மலையாள நடிகா் உன்னி முகுந்தனுடன் பாகமதி பாக்மதி என்ற படத்தில் இணைந்து நடித்தார். பெண்ணாக நடித்து வரும் அவருக்கு பெண்களை பற்றி சில விஷயங்களை டிப்ஸ்ஸாக கூறியுள்ளார்.

அனுஷ்கா தற்போது நாயகிக்கு முக்கியத்துவம் உள்ள கதைகளை தோ்ந்தெடுத்து நடித்து வருகிறார். ஹீரோவுடன் டூயட் பாடுவது, லவ் பண்ணுவது, ரொமான்ஸ் செய்து டான்ஸ் ஆடுவது என்று நடிக்காமல் தவிர்த்து வருகிறார். பெண்களுக்கு முக்கியத்துவம் வாய்ந்த படங்களாக பார்த்து நடித்து வருகிறார். அப்படிதான் நடித்த பாகமதி படமானது நல்ல வரவேற்பை பெற்றது.

பாகமதி படத்தில் நடித்த உன்னி முகுந்தன் சானக்கிய தந்திரம் என்ற மலையாள படத்தில் ஐந்து கேரக்டரில் நடித்து வருகிறார். அந்த ஐந்து கேரக்டரில் ஒரு பெண் கதாபாத்திரமும் இருக்கிறது. சமீபத்தில் தான் இவா் பெண் வேடத்தில் நடிக்கும் புகைப்படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. உன்னி முகுந்தனின் பெண் தோற்றம் அவர் தானா என்று அடையாளம் காணும்படி இல்லை. நிஜமான ஒரு பெண் போன்று உள்ளது. அவா் பெண் கதாபத்திரம் ஏற்று நடிப்பதை அறிந்த நடிகை அனுஷ்கா பெண்களை பற்றிய சில குறிப்புகளை டிப்ஸ்ஸாக கொடுத்துள்ளாராம். இந்த செய்தியை அந்த படத்தின் இயக்குநா் கண்ணன் தாமரைகுளம் ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.