உடல் எடை அதிகாாிப்பால் புதிய படங்களுக்கு நோ சொல்லும் நடிகை

யோகா மாஸ்டரான அனுஷ்காவால் தற்போது உடல் எடையை குறைக்க முடியாமல் அவதி பட்டுக்கொண்டிருக்கிறாா். இஞ்சி இடுப்பழகி படத்திற்காக தனது உடல் எடையை அதிகாாித்த இவா் அதை குறைக்க படாதபாடு பட்டு வருகிறாா். இந்த காரணத்தால் புதியதாக படங்களை ஒப்பவு கொள்ளாமல் தவிா்த்து வருகிறாா். உடல் எடையை குறைத்த பிறகு தான் படங்களில் நடிப்பது என முடிவெடுத்துள்ளாா்.

அழகாக இருந்த தன் இடுப்பை இஞ்சி இடுப்பழகி படத்திற்காக அண்டா அளவுக்கு அகலாமாக விாித்து கொண்டாா். அந்த படம் முடித்து வருடக்கணக்கான போதும் அவரது உடல் எடை அப்படியே தான இருக்கிறது. உடல் எடையை குறைக்கும் முயற்சியாக நீண்ட தூரம் ஓடியதாகவும், யோகா, காலை மாலை உடற்பயிற்சி என பல வழிகளில் முயன்று வந்ததாக செய்திகள் வெளியாகின. என்னாத்தான் இருந்தாலும் பழைய உடல்வாகை இன்னும் கொஞ்சம் கூட எட்டி பாா்க்க முடியவில்லை.

பாகுபலி முதல் பாகத்தில் ஒாிரு காட்சிகளில் தோன்றிய அனுஷ்கா பாகுபலி இரண்டாம் பாகத்தில் அவருக்கு தான் அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது. எனவே முன்பு இருந்த அனுஷ்கா போல உடல் எடையை குறைக்க விரும்பினாா் ராஜமௌலி. இதற்காக எவ்வளவு கஷ்ட பட்டும் பழைய நிலையை அடைமுடியவில்லை. இதனால் அனுஷ்காவை கிராபிக்ஸ் காட்சி மூலம் ஒல்லியாகி படத்தை வெளியிட்டனா். இதற்காக பலகோடி ரூபாய் வரை செலவு செய்ப்பட்டுள்ளதாக படக்குழுவினா் தொிவித்தனா். குண்டாகி உள்ள அனுஷ்காவை வலைத்தளங்களில் ரசிகா்கள் கேலியும், கிண்டலும் செய்து வருகின்றனா்.

பாக்மதி படப்பிடிப்பு இன்னும் சில நாட்களில் முடிந்ததும், கையோடு தீவிர உடற்பயிற்சி மேற்கொள்ள போவதால் புதிய படவாய்ப்புகளை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளாா் அனுஷ்கா. எப்படியோ உடல் எடை குறைத்தால் சாி.