திரையுலகில் எந்த நடிகையும் தான் குண்டாவதை விரும்ப மாட்டார்கள். திருமணம் ஆனால் கூட ஸ்லிம்மாக இருந்து நடிக்க வேண்டும் என்றே நினைப்பார்கள். தப்பித்தவறி குண்டாகி விட்டால் அவர்களின் திரையுலக வாழ்வு கிட்டத்தட்ட முடிந்தது என்றே சொல்லலாம். அப்புறம் அவர்களுக்கு அக்கா, அண்ணி, அம்மா வேடம்தான்.

நடிகை அனுஷ்காவை பார்த்தோம் என்றால் மிக ஸ்லிம்மான நடிகை திருமணம் முடித்தும் இன்னும் செட்டிலாகவில்லை, ஆனால் அதற்குள் வித்தியாசமான கேரக்டர் செய்றேன் என இஞ்சி இடுப்பழகி படத்திற்காக மிக குண்டான நடிகையாக ஆனார். உடல் பலமாக வெய்ட் போட்டது.

இவ்வளவு சிரமப்பட்டும் படம் எதிர்பார்த்த வெற்றி அடையவில்லை. வெற்றி அடையாவிட்டாலும் பரவாயில்லை அவரின் குண்டான உடல் பலவித உடற்பயிற்சிகள், யோகா, உணவுக்கட்டுப்பாடு என இருந்தாலும் முன்பு இருந்த ஒல்லியான உடலை பெற முடியவில்லையாம். இதனால் வெளிநாட்டு மருத்துவத்தை நாடியிருக்கிறாராம் அனுஷ்கா.