கடந்த சில மாதங்களுக்கு முன்னர் மலையாளத்தில் விஜய் ரசிகர்கள் குறித்த ஒரு திரைப்படம் வெளிவந்து வெற்றி பெற்றது என்பது நினைவிருக்கலாம். போக்கிரி சைமன்’ என்ற இந்த படத்தில் முக்கிய வேடத்தில் நடித்தவர் அப்பானி சரத் இவர் ஒரு தீவிர விஜய் ரசிகராக அந்த படத்தில் நடித்திருந்தார்

இந்த நிலையில் அப்பானி சரத் தற்போது விஷாலின் சண்டக்கோழி 2′ படத்தில் வில்லனாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். அதுமட்டுமின்றி இவர் ஏற்கனவே மணிரத்னம் இயக்கி வரும் ‘செக்க சிவந்த வானம்’ படத்திலும் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

விஷால் மற்றும் மணிரத்னம் படத்தில் முதன்முதலாக நடிக்க வாய்ப்பு கிடைத்தது குறித்து மகிழ்ச்சி தெரிவித்துள்ள அப்பானி சரத், தமிழில் அதிக படங்கள் நடிக்க வேண்டும் என்பதே தனது ஆசை என்று கூறியுள்ளார்