தேசிய விருதுகள் பற்றி மீண்டும் சர்ச்சையை கிளப்பிய ஏ.ஆர்.முருகதாஸ்

2016 ஆம் ஆண்டுக்கான தேசிய திரைப்பட விருதுகள் சமீபத்தில் அறிவக்கப்பட்டன.
அறிவிக்கப்பட்ட தேசிய விருதுகளை பற்றி ஏ.ஆர்.முருகதாஸ் கடந்த வாரம், தேசிய விருதுகள் பாரபட்சமாக அறிவிக்கப்பட்டுள்ளது என தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். இது திரையுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதற்க்கு தேர்வு குழுவில் இருந்த பிரியதர்ஷன் விளக்கம் கூறினார்.

இதை தொடர்ந்து மீண்டும் தேசிய விருதுகள் குறித்து ஏ.ஆர்.முருகதாஸ் மீண்டும் ஒரு கருத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.
அதில் அவர் கூறியதாவது,” நடுவர்களே தேசிய விருதுகள் கூறித்து நான் கூறியது என்னுடைய கருத்து மட்டுமல்ல ஒட்டுமொத்த இந்திய ரசிகர்களின் குரலும் கூட, என்னிடம் விவாதம் செய்வதை விட உண்மையை வெளிக்கொண்டு வாருங்கள்” என பதிவிட்டிருந்தார்.