இயக்குனர் முருகதாஸ் இயக்கத்தில் சர்கார் திரைப்படம் வெளிவரவிருக்கிறது. சமீபத்தில் மிகப்பிரமாண்டமாக இப்படத்தின் இசை வெளியீட்டு விழா நடந்தது. கீர்த்தி சுரேஷ், வரலட்சுமி, யோகிபாபு நடித்துள்ள இப்படத்திற்கு ஏ.ஆர் ரஹ்மான் இசையமைத்துள்ளார்.

வரும் தீபாவளிக்கு படம் வர இருக்கும் நிலையில் வரும் அக்டோபர் 19ல் இப்படத்தின் டீசர் வெளியிடப்படுகிறது. இதற்கு முன் விஜய் நடித்த கத்தி திரைப்படத்தின் டிரெய்லரும் அக்டோபர் 19ல் வெளியிடப்பட்டது.

விஜயின் துப்பாக்கி, கத்தி, சர்கார் உள்ளிட்ட ஏ.ஆர் முருகதாஸ் கூட்டணி படங்கள் அனைத்தும் தீபாவளிக்கு மட்டுமே வந்துள்ளன. இது முருகதாஸின் சென்டிமெண்டா அல்லது நடிகர் விஜயின் சென்டிமெண்டா என கேட்டால் முருகதாஸின் சினிமா சென்டிமெண்ட்தான் என உறுதியாக கூறலாம்  .

விஜய் நடிக்காமல் முருகதாஸ் இயக்கிய ஏழாம் அறிவு திரைப்படமும் தீபாவளிக்குதான் ரிலீஸ் ஆனது. முருகதாஸ் இயக்கிய ரமணா திரைப்படம் கூட 2002ல் தீபாவளிக்கு தான் வந்தது . முருகதாஸ் தீபாவளிக்கு ரிலீஸ் செய்யாமல் சாதாரண நாளில் வெளியிட்ட ஸ்பைடர் படம் தோல்வியடைந்தது.

அவரின் தீனா, கஜினி படங்கள் மட்டுமே தீபாவளியை தவிர்த்து வேறு நாளில் வெளியாகி வெற்றி பெற்றுள்ளது .ஒரு கட்டத்தில் தீபாவளிக்கு மட்டுமே படம் ரிலீஸ் செய்வதை கொள்கையாகவும் சென்டிமெண்டாக முருகதாஸ் வைத்துக்கொண்டார் என தெரிகிறது.

அவரின் தீபாவளி திரைப்பட சென் டிமெண்ட் படி தீபாவளிக்கு வரும் சர்கார் பெரும் வெற்றியை பெறுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்