நாடாளுமன்றத் தேர்தல் 7 கட்டங்களாக நாடு முழுவதும் தேர்தல் நடக்க உள்ளது. வருகிற ஏப்ரல் 18 தமிழகத்தில் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் அனைவரையும் வாக்களிக்க வைக்க வேண்டும் என பிரதமர் மோடி விரும்புகிறார்.

இதற்காக கிரிக்கெட் பிரபலங்கள், நடிகர் நடிகைகள், சினிமா பாடகர்கள், என பலருக்கும் அவர் வேண்டுகோள் விடுத்து வருகிறார்.

குறிப்பாக கிரிக்கெட் வீரர்கள் தோனி, விராட் கோலி, பாடகர்கள் லதா மங்கேஸ்கர், சங்கர் மகாதேவன், நடிகர்கள், வருண் தவான், விக்கி கௌசல், ரன்வீர் சிங் நடிகைகள் அனுஷ்கா ஷர்மா, தீபிகா படுகோன் ஆகியோரிடம் அனைவரையும் வாக்களிக்க வைக்க பேசுமாறு கேட்டுக்கொண்டுள்ளார்.

இதன் ஒரு பகுதியாக சமீபத்தில் அவரின் ட்விட்டர் பதிவில், சச்சின், லதா மங்கேஸ்கர், ஏ.ஆர்.ரஹ்மான், பேசினால் நாடு கேட்கும். வருகிற நாடாளுமன்ற தேர்தலில் மக்களை வாக்களிக்க வலியுறுத்துமாறு நான் இந்த பிரபலங்களை பணிவாக கேட்டுக்கொள்கிறேன்’ என்றார்.

இதனை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்த ஏ.ஆர்.ரஹ்மான், கண்டிப்பாக செய்வோம் ஜி. நன்றி என பதில் ளித்துள்ளார்.