சிவகார்த்திகேயன் நடிப்பில் சமீபத்தில் வெளியான படம்
‘சீமராஜா’. இப்படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.
இதைத் தொடர்ந்து, அடுத்தடுத்து 2 படங்களில் நடிக்கவுள்ளார்.

‘ஸ்டுடியோ க்ரீன் ஞானவேல்ராஜா தயாரித்த ‘வேலைக்காரன்’
படத்தைத் தொடர்ந்து, தற்போது 2வது படத்திலும்
இணைந்திருக்கிறார். இப்படத்தை எம்.ராஜேஷ் இயக்குகிறார்.

இப்படத்தில் சிவாவுக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார்.
தற்போது இந்த படத்திற்கு ‘எஸ்.கே.13’ என பெயரிடப்பட்டுள்ளது.

அடுத்ததாக ‘சீமராஜா’ படத்தைத் தயாரித்த ஆர்.டி.ராஜாவின் 24
ஏஎம் ஸ்டுடியோ சிவகார்த்திகேயனின் இன்னொரு
படத்தையும் தயாரிக்கிறது. இப்படத்தை ‘இன்று நேற்று நாளை’
படத்தை இயக்கிய ரவிக்குமார் இயக்குகிறார்.

இதில் சிவாவிற்கு மேலும், இப்படத்தில் யோகி பாபு,
கருணாகரன் உள்பட பல நட்சத்திரங்கள் முக்கிய
கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர் ரகுல் ப்ரீத்சிங் ஜோடியாக
நடிக்கிறார்.மேலும், இப்படத்தில் யோகி பாபு, கருணாகரன்
உள்பட பல நட்சத்திரங்கள் முக்கிய கதாபாத்திரத்தில்
நடிக்கின்றனர்

இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்க உள்ளார்.
சிவகார்த்திகேயனுக்காக தனது சொந்த குரலில் பாடல் ஒன்றை
பாடவுள்ளராம்.

ஏ.ஆர்.ரஹ்மான் அமைத்த டியூன் சிவாவிற்கு பிடித்து விட்டதால்,
தனக்காக பாட வேண்டும் என்று வற்புறுத்தியதையடுத்து
அவர் சம்மதம் தெரிவித்துள்ளார். இதனையடுத்து, படப்பிடிப்பு
விரைவில் ஆரம்பமாகும் என்று தகவல் வெளியாகியுள்ளது,