இயக்குனர் அட்லி, இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமானை கவர்ந்த சமீபகாலமாக இயக்குனர்களில் முக்கியமானவர். உதயா, மெர்சல், சர்கார், ஆகிய படங்களை தொடர்ந்து ஏ.ஆர்.ரகுமான், விஜய்யின் புதிய படத்துக்கு இசையமைத்து வருகிறார். இந்த படத்தை இயக்குவது அட்லி. தெறி மெர்சலை தொடர்ந்து 3வது முறையாக விஜய் படத்தை இயக்கி வருகிறார்.

விஜய் படத்துக்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைப்பது இது நான்காவது முறையாகும். இந்த படத்தின் இயக்குனர் அட்லி பற்றி ஏ.ஆர்.ரகுமான் கூறுகையில், நான் பணியாற்றிய பீலே, லகா ஆகிய 2 இந்தி படங்களை பாரத்து அட்லி ரசித்துள்ளார். அவர் ஒரு உணர்ச்சிகரமான இயக்குனர். ரசித்து ரசித்து இசை கேட்பார். அதே சமயம் எது கொடுத்தாலும் சரி என்று சமாதானம் ஆகமாட்டார். அவர் நல்ல இசை ரசிகர் என்றார்.