Nayanthara

கடந்த ஆண்டு நயன்தாரா நடிப்பில் வெளிவந்த அறம் படம் ரசிகா்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வசூலை வாரி வழங்கியது. அறம் படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்கும் எண்ணம் தற்போதைக்கு இல்லை என இயக்குநா் கோபி நயினார் தெரிவித்துள்ளார்.

ஆழ்துளை கிணற்றில் விழுந்த குழந்தையை கலெக்டரான நயன்தாரா எப்படி காப்பாற்றுகிறார் என்பது தான் படம். சமூக கருத்துக்களை வலியுறுத்தி வெளிவந்த அறம் படத்தை மக்கள் அனைவராலும் கொண்டாடப்பட்டது. இந்த படத்தை இயக்கிய கோபி நயினார் அறம் படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்க இருப்பதாக தகவல் வெளியானது. அதிலும் நயன்தாரா தான் நடிப்பார் என்றும் செய்திகள் வந்தது.

இந்நிலையில் அவருடைய அடுத்த படம் பற்றி அறிவிப்புக்காக காத்திருந்த ரசிகா்களுக்கு, எனது அடுத்த படம் அறம் என்பது கண்டிப்பாக இல்லை. ஆனால் அடுத்தப்படமும் சமூகக்கருத்தை பற்றிய படமாக தான் இருக்கும் என்று தெரிவித்துள்ளார் கோபி நயினார். எனவே அறம் இயக்குநரின் அடுத்தப்படம் பற்றிய அறிவிப்பு விரைவில் வரும் என எதிர்பார்க்கலாம்.