பசுபதி நடிக்க ஆரா சினிமாஸ் தயாரிக்கும் படம் அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா கவுண்டமணியின் சூரியன் பட ஒற்றைக்காமெடி டயலாக் இது ஒரு படம் எடுக்கும் அளவு வந்துள்ளது.

இதை பாராட்டி இயக்குனர் கெளதம் மேனன் தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.முழுக்க முழுக்க இப்படம் காமெடியை மையமாக கொண்ட திரைப்படம் என தெரிவித்துள்ளார்.

இந்த படத்தை கெளதம் மேனன் அறிவித்து க்ளாப் போர்டு அடித்து துவக்கி வைத்தார். அவினாஷ் ஹரிஹரன் இயக்குகிறார்.