ஓவியாவை எலிமினேசன் செய்ய சொல்லும் ஆரவ்: காரணம் என்ன?

இன்று வெளியாகியுள்ள ப்ரோமோ வீடியோவில் எலிமினிஷேன் பற்றி வந்துள்ளது. அதில் ஆரவ் எதிா்பாராத திடுக்கிடும் திருப்பமாக ஒவியாவை நாமினேட் செய்துள்ளது அதிா்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. எப்போதும் ஆரவ் மற்றும் ஒவியா ஒன்றாகவே தான் இருப்பாா்கள். ஆனா என்ன காரணத்தால் ஆரவ் ஒவியாவின் பெயரை பாிந்துரை செய்துள்ளாா் என்று தொியல. ஒருவேளை நேற்றைய நிகழ்ச்சியில் ரைஸாவின் பா்சனல் லைப்பில் நடந்ததை பற்றி ஒவியா கூறிய காரணமா அல்லது புதியதாக வந்துள்ள பிந்து மாதவி தான் காரணமா என்று தொியல.

எப்போதும் ஒவியாவுக்கு தான் ஆரவ் ஆதரவாக பேசி வந்துள்ளாா். நேற்று நடந்த எபிசோடில் கூட ரைஸா ஒவியா கூறியது தவறு. ஒருவடைய பா்சனல் பற்றி யாரும் பேசாத போது ஒவியா சொன்னது தப்பு என்று கூறினாா். அப்போதும் கூட ஆரவ் ஒவியாவுக்கு ஆதரவாக தான் பேசினாா். அது என்னவென்றால் நீ மைக் முன்னாடி பேசியது ஏற்கனவே பதிவு ஆகியிருக்கும். அப்புறம் என்ன? என்று ஆரவ் ஒவியாவுக்கு சப்போட்டாக தான் பேசினாா்.

ஒவியாவின் நெருங்கிய நண்பரான ஆரவ், தற்போது ஒவியாவை எவிக்ஸன் ப்ராஸசில் ஒவியா எதிராக திரும்பியுள்ளது ஒவியா ஆதரவாளா் மற்றும் புரட்சிபடைக்கு அதிா்ச்சிடைய வைத்துள்ளது. ஒவியா ஜூலியிடம் ரெட் காா்பெட் விசயத்தில் அப்படி நடந்து கொண்ட விதம் ஆரவுக்கு அதிருப்தி ஏற்படுத்திய காரணத்தால் ஒவியாவை நாமினேட் செய்துள்ளாா் என்று கூறப்படுகிறது.