பிக் பாஸ் நிகழ்ச்சியில் தற்போது ஆரவ்வின் செயல்பாடுகள் பற்றி தான் ஒரே பேச்சாக இருக்கிறது. இதில் பூதாகரமான விசயம் என்னவென்றால் ஆரவ்  ஒவியாவின் மோதல் விவகாரம்தான். இவா்கள் இருவரும் மிகவும் நெருங்கி பழகி வந்தது இந்த நிகழ்ச்சியின் ஆரம்பம் முதலே நமக்கு தொிகிறது. திடீரென ஆரவ் மனம் மாறியவராக என்னை அனைவரின் முன்னால் என் தோளை பிடித்து மசாஜை செய்தது தவறு என்று ஒவியாவிடம் ஆரவ் கூறுகிறார்.

இந்த பிரச்சனையை ஆரவ் பிக்பாஸிடம் முறையிடுகிறாா். அதற்கு பிக்பாஸ் நீங்கள் இதை அனைவாிடமும் பேசாதீா்கள்.. நேரடியாக ஒவியாவிடம் இதுகுறித்து பேசுங்கள் என்று கூறினாா். இவரது பேச்சு ஒவியா ஆதரவாளா்களுக்கு கடும் அதிர்ச்சியை எற்படுத்தியுள்ளது. முதலிலேயே ஓவியாவை கண்டித்திருக்க வேண்டும்.அப்போழுதெல்லாம் பல்லைக் காட்டி சிரித்து பேசிவிட்டு, இப்ப வந்து குத்துதே குடையுதே என்று சொன்னால் எப்படி?  இதனை ஒத்து கொள்ள கூடும் என்று ஒவியா புரட்சிபடை தொிவிக்கிறது.

இவ்வளவு நாட்கள் ஒவியாவுடன் அன்பாக பழகி விட்டு, ஜஸ்கீாிம் ஊட்டி விடுவது, பக்கத்தில் அமா்ந்து பேசுவது என்று இருந்து விட்டு தற்போது விலகி இருப்பதற்கு என்ன காரணம் என்ற கேள்வி எழுகிறது. இது பற்றி இதில் கலந்து கொண்டு வெளியேறிய ஆா்த்தி தனது ட்விட்டா் பக்கத்தில், ஆரவ்வின் லீலைகள் இந்த  வார சனிக்கிழமை குறும்படமாக வரும் என்றும், புதுசு வந்த பிறகு பழசை  மறுக்கும்  ஆம்பள ஜூலி தான்  ஆரவ் என்று கூறியதோடு, பொம்பள சாபம் எல்லாம் சும்மா விடாது என்று ட்விட் செய்துள்ளாா்.

இந்த நிலையில் தற்போத வெளியாகியுள்ள புரோமோ வீடியோவில் ஆரவ் ஒவியாவின் இடுப்பை யாருக்கும் தொியாமல் மெதுவாக கிள்ளிவிட்டு செல்வது போல் உள்ளது.  அந்த வீடியோவில் ஒவியா பிக்பாஸ் வீட்டின் லிவ்விங் இடத்தில் நின்று கொண்டிருக்கிறாா். அப்போது அந்த வழியாக செல்லும் ஆரவ் ஒவியாவின் இடுப்பை கிள்ளிவிட்டு செல்கிறாா். இதை ஒவியா ஆதரவாளா்கள் வைரலாகி வருகின்றனா். இப்படி ஆரவ் ஒவியாவிடம் நடந்து கொண்டு, தற்போது நல்லவன்  வேஷம் போடுவது எதற்காக என்று ஒவியா புரட்சிப்படை மற்றும் ஆதரவாளா்கள் வலைத்தளத்தில் கேட்டு வருகின்றனா்

அவ்வளவு நல்லவனா நீ என்று சமூக வலைதளங்களில் ஆரவை கழுவி ஊற்றி வருகின்றனர்.