களவாணி படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமான நடிகை ஒவியா பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் தான் மிகவும் பிரபலமடைந்தார். பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துக்கொண்ட ஆரவ் மீது காதல் கொண்ட ஒவியா அதன்பின் அதிலிருந்து வெளியேறினார்.இந்நிலையில் ஆரவ் ஒவியாவை ஏன் பிடிக்கும் என்பதற்கான காரணத்தை கூறியுள்ளார்.

பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பான நிகழ்ச்சியின் மூலம் பிரபலமடைந்த ஆரவ்வுக்கும் ஒவியாவுக்கும் இடையே காதல் மலர்ந்ததாக கூறப்பட்டது. ஆனால் இந்த காதலை ஆரவ் மறுத்தார். ஒவியாவால் இதை ஏற்றுக்கொள்ள முடியாததால் மனமுடைந்து இந்நிகழ்ச்சியிலிருந்து வெளியேறினார்.

ஆரவ் பிக்பாஸ் டைட்டிலை வென்றார். இந்த விஷயம் மெல்ல மெல்ல மறுக்கபட்டு வருகிறது. பிக்பாஸ் நிகழ்ச்சி முடிந்த பிறகு ஆரவ்வும், ஒவியாவும் எப்போதும் போல சகஜமாக பேசி வருகிறார்கள். ஒவியாவுக்கும் சினிமா வாய்ப்புகள் கிடைக்க நடித்து வருகிறார். ஆரவ் ஒவியாவை ஏன் பிடிக்கும் என்பதற்கான விளக்கத்தை தெரிவித்துள்ளார்.

எல்லா இடத்திலும் நாம் நாமாக இருப்பது என்பது இந்த உலகத்திலேயே மிகவும் கஷ்டமான விஷயம். ஏதோ ஒரு வகையில் பெரும்பலான இடங்களில் நாம் நடித்துக்கொண்டு தான் இருக்கிறோம்.ஆனால் ஒவியா அப்படி இல்லாம் எல்லா இடங்களிலும் அவராகவே இருந்தார். அதனால் தான் அனைவருக்கும் அவரை பிடித்திருக்கிறது. அதுவும் ரசிகா்கள் ஒவியா ஆர்மி உருவாக்கும் அளவுக்கு புகழ் அடைந்ததற்கும் இதுதான் காரணமாக அமைந்தது என்று கூறியுள்ளார் ஆரவ்.