‘கொலை விளையும் நிலம்’ என்ற குறும்படம், விவசாயிகளின் சோகத்தையும், கடன் தொல்லையால் பூச்சிமருந்து குடித்து சாகும் அவலங்களையும் விளக்கும் படம். இந்த படம் இணையதளங்களில் வெளியாகி பெரும் பாராட்டுக்களை பெற்று வருகிறது

இந்த நிலையில் பத்திரிகையாளர் ராஜீவ்காந்தி இயக்கிய இந்த குறும்படத்திற்கு டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் பாராட்டு தெரிவித்துள்ளார். அவர் தனது டுவிட்டரில், ‘”தமிழக விவசாயிகளின் தற்கொலைகளைச் சொல்லும் ஆவணப் படம் கொலை விளையும் நிலம். பத்திரிகையாளர் க ராஜீவ் காந்தி இயக்கியுள்ள இந்தப் படம் தமிழ் நாட்டு விவசாயிகளின் இப்போதைய நிலையை தெளிவாகக் காட்டுகிறது,” என்று கூறியுள்ளார்.

ஏற்கனவே இந்த குறும்படத்தை திருநாவுக்கரசு, பாலபாரதி, செல்வப் பெருந்தகை, போராளி வளர்மதி, விவசாய சங்கத் தலைவர் பிஆர் பாண்டியன் ஆகியோர் பாராட்டியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.