அப்போது எல்லாம் மாப்பிள்ளை எப்படி இருக்க வேண்டும் என்று கேட்டால் அரவிந்த்சாமி மாதிரி இருக்க வேண்டும் என்று பெண்கள் கூறுவார்கள். அந்தளவுக்கு பெயர் பெற்ற அவர் சிறிது காலம் சினிமாவிலிருந்து விலகி இருந்தார். அதன் பின் கடல் படத்தின் மூலம் நடிகராக அவதாரம் எடுத்து ரீ என்ட்ரி கொடுத்தார். தற்போது அரவிந்த்சாமி சினிமாவில் அடுத்த படியாக இயக்குனராக உள்ளார்.

கடல் படத்தை தொடர்ந்து அரவிந்த்சாமி அடுத்தடுத்து படங்களில் நடிக்க தொடங்கினார்.ஜெயம் ரவியுடன் இவர் தனியொருவன் இவருக்கு நல்ல பெயரை சம்பாதித்து கொடுத்தது. பின் போகன் படத்திலும் மீண்டும் ஜெயம் ரவியுடன் இணைந்து நடித்தார். வருகிற வெள்ளி கிழமை அன்று வெளியாக உள்ள பாஸ்கர் ஒரு ராஸ்கல் படத்தில் அரவிந்த்சாமி நடித்துள்ளார். தொடர்ந்து சதுரங்க வேட்டை 2, நரகாசூரன், வணங்காமுடி, செக்க சிவந்த வானம் படத்திலும் நடித்து வருகிறார். சமீபத்தில் தான் செக்க சிவந்த வானம் படத்தில் தனது பகுதியை முடித்துள்ளார். இந்த படத்தினை இயக்குனர் பாரதி ராஜா இயக்கி வருகிறார்.

தன்னுடைய நீண்ட நான் கனவும் மற்றும் ஆசையான இயக்குநர் ஆகும் முயற்சியில் தீவிரமாக களம் இறங்கியுள்ளார். சினிமாத் துறையின் ஸ்டிரைக்கால் படங்களின் ரீலிஸ் தேதி தள்ளி போனது , புதிய படங்களின் படப்பிடிப்பு ஏதும் நடைபெறாமல் இருந்த காரணத்தால் கிடைத்த நாட்களை தன்னுடைய இயக்குனராக ஆசைக்கு பயன்படுத்தி கதையை எழுதி விட்டார். அதற்கான பணிகளை தற்போது தொடங்கியுள்ளதாக கூறப்படுகிறது.