அர்ச்சகர்கள் நியமனம் : கமல்ஹாசன் கருத்து

 

          உலக நாயகன் கமல்ஹாசன் அவ்வப்போது அரசியல் சார்ந்த,சமூகம் சார்ந்த கருத்துகளை தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துவரும் நிலையில் இன்று அர்ச்சகர் நியமனம் குறித்த தனது கருத்து ஒன்றை வெளியிட்டிருக்கிறார்.

          அதில் அவர் கூறியிருப்பதாவது, திருவாங்கூர் தேவஸ்தானத்தில் பிராமணர் அல்லாத அர்சகர்கள் நியமனம் செய்யப்பட்டனர். நன்றி கேரள முதல்வருக்கும் தேவஸ்தானத்துக்கும். வைக்கம் வீரர்க்கு வணக்கம். ‘இவ்வாறு கூறியிருக்கிறார்.

          திருவாங்கூர் தேவஸ்தானத்தில் 36 பிராமணர்கள் அல்லாத அர்ச்சகர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளதற்கு கேரள முதல்-மந்திரி பினராயி விஜயனுக்கும், திருவாங்கூர் தேவஸ்தானத்திற்கும் வாழ்த்து தெரிவித்து தலைவணங்குவதாக கூறியிருக்கிறார். இந்த புரட்சிக்கு வித்திட்டவர் தந்தை பெரியார் என்பதால் வைக்கம் வீரர் என்று அவரை குறிப்பிட்டு அவருக்கும் கமல் நன்றி கூறியிருப்பது இந்த டுவிட்டின் சிறப்பாக கருதப்படுகிறது.