குற்றம் 23 படத்தை அடுத்து இயக்குநா் அறிவழகன் படத்தில் நயன்தாரா நடிப்பது உறுதியாகியுள்ளது.

குற்றம் 23 வெற்றி படத்தை அடுத்து அறிவழகன் அடுத்த படத்திற்கான பணிகளில் ஈடுபட்டு வந்தார். இப்போது அதுக்குறித்து செய்திகள் வெளியாகி உள்ளது. சைக்கோ த்ரில்லா் படமான இதில் நயன்தார நடிப்பது உறுதியாகியுள்ளது. முதலில் மஞ்சு வாரி நடிப்பதாக இருந்த இந்த படத்தில் தற்போது நயன்தாரா நடிப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு நயன் நடிப்பில் வெளி வந்த அறம் மாபெரும் வெற்றி பெற்றது. அவா் நாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படங்களான தற்போது இமைக்கா நொடிகள், கொலையுதிர் காலம், கோலமாவு கோகிலா ஆகியவற்றில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.