பட்டிமன்ற நடுவரும், தமிழ் ஆா்வலருமான அறிவொளி உடல்நலக் குறைவால் நேற்றிரவு காலமானார்.

திருச்சியை சேர்ந்த பிரபல தமிழ் இலக்கிய சொற்பொழிவாளர் அறிவொளி கடந்த சில நாட்களாக உடல்நலக்குறைவுடன் மருத்துவமனையில் அனுமதிக்கபட்டு சிகிச்சை பெற்று வந்தார். அவருக்கு வயது 80. முதன் முதலில் 1986 ஆம் ஆண்டு வழக்காடு மன்றத்தை அறிமுகப்படுத்திய அறிவொளி சிகிச்சை பலன்றி காலமானார்.

திருச்சி டி.வி.எஸ் டோல்கேட் அருகே உள்ள ஹீனபா காலனியை சேர்ந்தவா். டென்மார்க் நாட்டின் தலைநகர் கோபன்ஹேகன் பல்கலைக்கழகத்தில் மாற்று மருத்துவத்தில் முனைவா் பட்டம் பெற்ற டாக்டர். உலக நாடுகளுக்கு தனது மருத்துவத்தை கொண்டு சென்றவா்.புற்றுநோய்க்கு மருந்து தமிழ் மருத்துவத்தில் தீர்வு இருக்கு என்று கூறியதன் மூலம் மிகவும் பிரபலடைந்தார். சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகம் மற்றும் பூம்புகார் கல்லூரியில் பேராசிரியாக பணியாற்றி உள்ளார்.

கபிலவாணர் விருது பெற்ற இவரது சொந்த ஊர் நாகை மாவட்டம் சீர்காழி அருகே உள்ள சிக்கல். இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் இரண்டு மகன்கள், இரண்டு மகள்கள் உள்ளனர். கடந்த சில மாதங்களாக உடலநலக்குறைவால் அவதிப்பட்டு வந்த அவர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவா் காலமானார். இன்று மாலை 3 மணியளவில் இறுதி சடங்கு திருச்சி ஹனீபா காலனியிலிருந்து தொடங்குகிறது. அன்னாரது உடலுக்கு அனைவரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.