அதிகமதிப்பெண் பெற்றும் நீட் தோ்வால் உயிரிழந்த அரியலூா் மாணவி அனிதாவின் பிறந்த நாள் இன்று கொண்டாடப்படுகிறது. வலைதளங்களிலும் அவருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனா்.

கடந்த கல்வி ஆண்டு முதல் நீட் தேர்வானது அறிமுகப்படுத்தப்பட்டது. இதனால் அரியலூரைச் மாணவி அனிதா பிளஸ் 2 தோ்வில் 1176 மதிப்பெண்கள் பெற்றிருந்த போதிலும் நீட் தோ்வில் வெற்றி பெறமுடியவில்லை. அந்த மாணவி அனிதாவின் மருத்துவராகும் கனவு காணாமல் போனது. இதனால் மனமுடைந்து அனிதா தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவமானது பெரிய தாக்கத்தை தமிழகத்தில் மட்டுமல்லாது இந்தியாவிலும் இந்த தாக்கம் பற்றிக்கொண்டது.

மருத்துவ மாணவி அனிதாவின் பிறந்த நாளை முன்னிட்டு அவருக்கு பெருமை சோ்க்கும் விதமாக அவரை பற்றிய ஒரு படம் உருவாக உள்ளது. அந்த படத்தை ஆர்.ஜே.பிக்சர்ஸ் யார்ல்மார்ட் பெருமையுடன் வழங்கும் Dr.அனிதா M.B.B.S என்ற தலைப்பில் தயாராக இருப்பதாக ஒரு போஸ்ட்டரை வெளியிட்டுள்ளது. தற்போது அந்த போஸ்டரானது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

அனிதா ஸ்டெதஸ்கோப்புடன் ஒரு தாமரை மலரில் இருப்பது போல அந்த போஸ்டரில் உள்ளது. அதோடு டாக்டர் அனிதா எம்பிபிஎஸ்., பெண்ணல்ல அதையும் தாண்டி புனிதமானவள்… என்று எழுதப்பட்டுள்ளது.

இந்நிலையில் மிக முக்கியமான செய்தி என்னவென்றால் இந்த படத்தில் அனிதாவின் கேரக்டரில் நம்ம பிக்பாஸ் ஜூலி நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. ஜல்லிக்கட்டு போராட்டத்தின் மூலம் பிரபலமாகி அதன் பின் பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் கலந்துக்கொண்ட ஜூலி தற்போது படங்களில் நடித்து வருகிறார். இவா் தற்போது ஒரு படத்தில் நாயகியாகவும் நடிக்கிறார்.