பெருச்சாழி ரீமேக்கில் அர்ஜூன்

மோகன்லால் நடித்த மலையாளப் படத்தின் தமிழ் ரீமேக்கில், அர்ஜுன் நடிக்கலாம் என கூறப்படுகிறது.

நிபுணன் வெற்றிப் படத்தை இயக்கிய அருண் வைத்தியநாதன் அடுத்ததாக தான் இயக்கிய பெருச்சாழி என்ற மலையாள படத்தை தமிழில் ரீமேக் செய்ய முடிவு செய்துள்ளார். . மோகன்லால் நடிப்பில் வெளியான இந்தப் படம் காமெடி கலந்த அரசியல் கதை அமைப்பைக் கொண்டது. நிபுணன் படப்பிடிப்பின்போது அர்ஜூனுடன் ஏற்பட்ட நெருக்கததை அடுத்து, இந்தப் படத்தில் அவரே நடிக்கலாம் என்று கூறப்படுகிறது.

ஏற்கெனவே முதல்வன் என்ற அரசியல் படத்தில் கலக்கியவர் அர்ஜூன் என்பது குறிப்பிடத்தக்கது.