அர்ஜூன் ரெட்டி படத்தில் அடித்த விஜய் தேவரகொண்டா, தற்போது தமிழ் படம் ஒன்றில் நடித்து வருகிறார் என்பது தெரிந்ததே. இந்த நிலையில் அவர் நடிகையர் திலகம் என்ற படத்திலும் ஒரு முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் அவருடைய கேரக்டர் பெயர் விஜய் ஆண்டனி என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க பாஸ்-  குடிகாரராக மாறிப்போன விஜய் ஆண்டனி

சாவித்ரி கேரக்டரில் கீர்த்திசுரேஷ், ஜெமினி கேரக்டரில் துல்கர் சல்மான் ஆகியோர் நடித்து வருவது தெரிந்ததே. மேலும் இந்த படத்தில் மதுரவாணி என்ற பத்திரிகையாளர் கேரக்டரில் சமந்தா நடித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

நாக் அஸ்வின் இயக்கியுள்ள இந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்து தற்போது போஸ்ட் புரடொக்சன்ஸ் பணி நடைபெற்று வருகிறது. இந்த படம் வரும் மே 9ஆம் தேதி ரிலீஸ் ஆகிறது.

இதையும் படிங்க பாஸ்-  அர்ஜூன் ரெட்டி நாயகனின் அடுத்த படத்தில் சுசீந்திரன் பட நாயகி