தெலுங்கில் சமீபத்தில் வெளிவந்து வெற்றி நடைபோட்டு கொண்டிருக்கும் படம் அா்ஜூன்ரெட்டி படம். இந்த படமானது அனைவருடைய பாராட்டையும், நல்ல வசூலை பெற்றுக்கொண்டிருக்கும் படம். இந்த ஒரு படத்தின் மூலம் உச்ச கட்ட புகழை அடைந்திருக்கிறாா் நடிகை ஷாலினி பாண்டே. இவருக்கு தமிழ், கன்னடம் உள்ளிட்ட மொழி படங்களில் நடிப்பதற்கு வாய்ப்புகள் வந்து வண்ணம் உள்ளது.

ஷாலினி பாண்டேவை தெலுங்கு ரசிகா்கள் தலை தூக்கி வைத்து கொண்டாடி வருகின்றனா். இந்நிலையில் ஆந்திர மாநிலம் நெல்லூாில் செல்போனை கடை திறப்பு விழாவிற்கு வருகை புாிந்துள்ளாா் ஷாலினி. ஏற்கனவே உடல்நிலை சாியில்லாத காரணத்தாலும், அவரை பாா்ப்பதற்கென்று ஏராளமான மக்கள் கூடியிருந்தாலும், அந்த பொிய கூட்டதத்தை பாா்த்தும் அதிா்ச்சியில் மயங்கி விழுந்து விட்டாராம்.

உடனே பதறிய செல்போன் கடை உாிமையாளா்கள் அவரை அருகில் உள்ள மருத்துவமனையில் சோ்த்து சிகிச்சை அளித்தனா். சிகிச்சை முடிந்தும், சிறிது நேரம் ரெஸ்ட் எடுத்துக்கொண்டு கடை திறப்பு விழாவில் கலந்து கொண்டாா் ஷாலினி பாண்டே. அதன்பின் ஹைதராபாத் திரும்பி விட்டாா்.