விஜய் நடிக்கும் சூப்பர் ஹீரோ படத்தில் அவருக்கு வில்லனாக ஆக்‌ஷன் கிங் அர்ஜுன் நடிக்க இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

சர்கார் படத்துக்குப் பிறகு அட்லி இயக்கும் புதிய படத்தில் விஜய் ஒரு கால்பந்தாட்ட பயிற்சியாளராகவும் மீனவராகவும் இரட்டை வேடத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை ஏ.ஜி.எஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. விஜய்க்கு ஜோடியாகவும் நயன்தாராவும் மற்ற முக்கியக் கதாபாத்திரங்களில் யோகிபாபு, கதிர், விவேக், டேனியல் பாலாஜி, ஆனந்த ராஜ், பாலிவுட் நடிகர் ஜாக்கி ஷெராப், இந்துஜா உள்ளிட்ட பலரும் நடித்து வருகின்றனர். இந்தப்படம் தீபாவளிக்கு வெளியாக இருக்கிறது.

இதையடுத்து விஜய், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ஒரு சூப்பர் ஹீரோ படத்தில் நடிக்க இருக்கிறார். இந்த படத்தில் அவருக்கு வில்லனாக அர்ஜுன் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சமீபகாலமாக அர்ஜுன் கதாநாயகனாக நடிப்பதை விட குணச்சித்திரப்பாத்திரங்களில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.