ஆக்சன் கிங் அர்ஜூன் தனது மூத்த மகள் ஐஸ்வர்யாவை, விஷாலுக்கு ஜோடியாக ஒரு படத்தில் நடிக்க வைத்தார். ஆனால் அந்த படம் பிளாப் ஆகவே, தற்போது அவரே ஐஸ்வர்யா நடித்துள்ள ஒரு படத்தை இயக்கியுள்ளார்.

‘சொல்லிவிடவா’ என்ற டைட்டிலில் உருவாகியுள்ள இந்த படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சமீபத்தில் சென்னையில் நடந்தது. இந்த நிகழ்ச்சிக்கு அர்ஜூனின் இரண்டாவது மகளும் வந்திருந்தார்

முதன்முதலில் அர்ஜூன் தனது இரண்டாவது மகளை பத்திரிகையாளர்களுக்கு அறிமுகம் செய்து வைத்துள்ளார். நல்ல வாய்ப்பு கிடைத்தால் அவரையும் சினிமா தொழிலில் இறக்கிவிட அவர் முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது.