தமிழக முன்னாள் முதல்வரும் திமுக தலைவருமான கருணாநிதி மிகவும் கவலைக்கிடமான நிலையில் உள்ளார் என மருத்துவமனை தகவல்கள் தெரிவிக்கின்றன. அவரது உடல் உறுப்புகள் செயலிழந்து வருவதாக மருத்துவமனை அறிக்கை வெளியிட்டதை அடுத்து தமிழகம் மிகவும் பதறமாக மாறியுள்ளது.

இதனையடுத்து அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் தமிழக அரசு துரிதமாக எடுத்து வருகிறது. டாஸ்மாக் மூடல், திரை அரங்கு மூடல், பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை என அனைத்து பணிகளும் முடுக்கிவிடப்பட்டுள்ளது.

இன்னொரு பக்கம் ராஜாஜி ஹாலில் அடுத்தக்கட்ட பணிகள் நடந்து வருகிறது. அதன் தொடர்ச்சியாக ராஜாஜி ஹாலிற்கு வந்த ராணுவ உயர் அதிகாரிகள் தற்போது ஆய்வு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.