ஹாலிவுட் முன்னாள் சூப்பர் ஸ்டாரும் உலக ஆணழகனுமான அர்னால்ட்டை மர்மநபர் ஒருவர் பின்னால் இருந்து தாக்கும் வீடியோ சமூகவலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.

ஹாலிவுட்டில் சில ஆண்டுகளுக்கு முன்னால் சூப்பர் ஸ்டாராக வலம் வந்தவர் அர்னால்டு ஸ்வாஸ்நேகர். இவர் முன்னாள் உலக ஆனழகனும் கூட. இவரது கட்டுடல் அழகைக் காண்பதற்காகவே இவர் நடித்த படங்களைக் காண்பதற்காக ரசிகர்கள் செல்வது வழக்கம். சினிமாவில் ஈட்டிய புகழின் மூலம் அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தின் ஆளுநராகவும் சில ஆண்டுகள் பணிபுரிந்தார்.

இதையும் படிங்க பாஸ்-  தினமும் 5 முறை மேட்டர் - அர்னால்டு சீக்ரெட் தெரியுமா?

இப்போது வயது முதிர்வின் காரணமாக அதிகளவில் படங்களில் நடிக்கமல் ஓய்வு எடுத்து வருகிறார். இருந்தாலும் அவ்வபோது பாடிபில்டிங் விழாக்கள் போன்ற விழாக்களுக்கு மட்டும் சென்று வருகிறார். அப்படி தென்னாப்பிரிக்காவில் நடைபெற்ற அர்னால்ட் கிளாசிக் ஆப்பிரிக்கா எனும் ஆண்டு விழா நிகழ்ச்சி ஒன்றில் இவர் பங்கேற்றார். அப்போது யாரும் எதிர்பாராத விதமாக அவரது முதுகுல் ஒருவர் பறந்துவந்து எட்டி உதைக்கிறார்.

இதையும் படிங்க பாஸ்-  அமெரிக்காவில் அடையாளம் தெரியாத ரஜினி - வெளியான புகைப்படம்

இந்தக் காட்சி அங்குள்ள காமிராக்களில் பதிவாகி சமூகவலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இதனையடுத்து அந்த மர்மநபரைப் போலிஸார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.