அருள்நிதி, மஹிமா நம்பியார் நடிப்பில் மு.மாறன் இயக்கிய ‘இரவுக்கு ஆயிரம் கண்கள்’ திரைப்படம் விரைவில் வெளியிட திட்டமிட்டுள்ள நிலையில் இந்த படம் நேற்று சென்சார் ஆகியுள்ளது

இந்த படத்தை பார்த்த சென்சார் அதிகாரிகள் ‘யூஏ’ சான்றிதழ் அளித்துள்ளனர். சென்சார் பணிகள் முடிவடைந்ததை அடுத்து இன்னும் ஓரிரு நாட்களில் இந்த படத்தின் அதிகாரபூர்வ ரிலீஸ் தேதி அறிவிக்கப்படவுள்ளது.

அருள்நிதி, மஹிமா நம்பியார், அஜ்மல், சாயாசிங், சுஜா வருனே, ஜான் விஜய், ஆனந்த்ராஜ் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு ‘விக்ரம் வேதா’ புகழ் சாம் CS இசையமைத்துள்ளார். சான் லோகேஷின் படத்தொகுப்பில், அரவிந்த் சிங்கின் ஒளிப்பதிவில்’ உருவாகியுள்ள ‘இரவுக்கு ஆயிரம் கண்கள் ஒரு திகில் படம் என்பது குறிப்பிடத்தக்கது