‘நெருப்புடா’ பாடல் மூலம் தமிழ் ரசிகர்களிடையே புகழ் பெற்ற பாடகர் அருண்காமராஜ், முதன்முதலில் இயக்கும் படத்தை சிவகார்த்திகேயன் தயாரிக்கின்றார் என்பது ஏற்கனவே தெரிந்ததே. இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த சில நாட்களாக திருச்சி அருகே நடைபெற்று வந்த நிலையில் தற்போது இந்த படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு முடிவடைந்துள்ளது.

இந்த தகவலை அருண்காமராஜ் தனது டுவிட்டரில் தெரிவித்துள்ளார். மேலும் இந்த படத்தின் நாயகி ஐஸ்வர்யா ராஜேஷூம் தனது டுவிட்டரில் இதுகுறித்து தெரிவித்துள்ளார்.

அருண்காமராஜ் தனது டுவிட்டரில், முதல் கட்ட படப்பிடிப்பினை வெற்றிகரமாக முடிக்க அர்ப்பணிப்புடன் உழைத்த அத்துனை நல்ல உள்ளங்களுக்கும் என் நெஞ்சார்ந்த நன்றி. என்று கூறியுள்ளார்.

சத்யராஜ், ஐஸ்வர்யா ராஜேஷ், தர்ஷன் உள்ளிட்ட பலர் நடித்து வரும் இந்த படத்திற்கு திபு நினன் தாமஸ் என்பவர் இசையமைக்கின்றார்