Arun Vijay with Goutham Menon -நடிகர் அருண் விஜய் இயக்குனர் கவுதம் மேனன் படத்தில் ஹீரோவாக நடிக்க இருப்பதாக செய்திகள் வெளிவந்துள்ளது.

சரியான பட வாய்ப்புகள் இல்லாமல் நடித்துக் கொண்டிருந்த அருண் விஜயை என்னை அறிந்தால் படத்தின் விக்டர் வேடம் அவரை ரசிகர்களிடம் கொண்டு போய் சேர்த்தது. அதற்கு எப்போதும் அஜித் மற்றும் கவுதம் மேனனுக்கு நன்றிக்கடன் பட்டிருப்பதாக அருண் விஜய் கூறி வருகிறார். மேலும், சமீபத்தில் வெளியாகி வெற்றி பெற்ற ‘தடம்’ திரைப்படம் அவரின் ஹீரோ அந்தஸ்தை உயர்த்தி தற்போது முன்னணி ஹீரோக்களில் ஒருவராக அவர் மாறியுள்ளார்.

இந்நிலையில், அவரை ஹீரோவாக வைத்து கவுதம் மேனன் ஒரு புதிய படத்தை இயக்கவுள்ளாராம். கவுதம் மேனன் இயக்கத்தில் உருவான துருவ நட்சத்திரம் மற்றும் எனை நோக்கி பாயும் தோட்டா ஆகிய படங்கள் வெளியாவதற்கு காத்திருக்கின்றன.

ஏற்கனவே விஷாலை வைத்து ஒரு புதிய படத்தை கவுதம் மேனன் இயக்கவுள்ள நிலையில், அருண் விஜய் படத்தையும் சேர்த்து இரு படத்தையும் ஒரே நேரத்தில் அவர் இயக்குவார் என செய்திகள் கசிந்துள்ளது.