தடையற தாக்க’ படத்திற்கு பின்னர் அருண்விஜய் மற்றும் இயக்குனர் மகிழ்திருமேனி கூட்டணியின் கைவண்ணத்தில் உருவாகியுள்ள படம் தடம்

இந்த படத்தின் படப்பிடிப்புகள் முடிவடைந்து டப்பிங் உள்பட போஸ்ட் புரடொக்சன்ஸ் பணிகள் தொடங்கியுள்ள நிலையில் இந்த படம் வரும் தமிழ்ப்புத்தாண்டு தினத்தில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது

அருண் விஜய், தான்யா ஹோப், ஸ்முருதி, பெப்சி விஜயன், யோகி பாபு, ஜார்ஜ், சோனியா அகர்வால், வித்யா பிரதீப், மீரா கிருஷ்ணன் உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு அருண்ராஜ் இசையமைத்துள்ளார்.