குடி போதையில் காரை செலுத்தினாரா அருண் விஜய்? – பரபரப்பு தீர்ப்பு

குடிபோதையில் காரை செலுத்தியதாக, நடிகர் அருண் விஜய் மீது போலீசார் தொடந்த வழக்கில், அவர் குற்றமற்றவர் என தீர்ப்பு வெளியாகியுள்ளது.

சில மாதங்களுக்கு முன்பு, நடிகை ராதிகாவின் மகள் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் பங்கு பெற்றுவிட்டு, தனது காரில் வேகமாக சென்ற நடிகர் விஜய், சென்னை நுங்கம்பாக்கம் பகுதியில் நின்றிருந்த போலீசார் வாகனத்தின் மீது தனது காரை இடித்து விபத்தை ஏற்படுத்தினார்.  அப்போது அவர் மது அருந்தியிருந்ததாக போலீசார் தரப்பில் கூறப்பட்டது. சில மாதங்களாக நடந்து வந்த அந்த வழக்கில் அவர் குற்றமற்றவர் என்ற தீர்ப்பு வெளியாகியுள்ளது.

இந்த செய்தி அவரின் குடும்பத்தினருக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.