மணிரத்னம் தற்போது செக்க சிவந்த வானம் படத்தை சிம்பு, விஜய் சேதுபதி, அரவிந்த்சாமி, அருண் விஜய் உள்ளிட்ட 4 நடிகா்களை வைத்து இயக்கி வருகின்றார். ஷங்கா் என்றாலும் மணிரத்னம் படம் படத்தை போல வருட கணக்கில் நடக்கும். ஆனால் தற்போது அந்த மாதிரி வருடக்கணக்கில் படத்தை எடுக்கும் முடிவிலிருந்து மாறியிருக்கிறார் மணிரத்னம். இந்த படத்தை குறைந்தது அறுபது நாட்களுக்குள் முடிக்க திட்டமிட்டிருக்கிறார்.

முதலில் அருண் விஜய் நடிக்கும் கேரக்டரில் பஹத் பாசில் நடிப்பதாக இருந்தது. வேலைக்காரன் படத்தின் மூலம் கோலிவுட்டில் என்ட்ரி கொடுத்த நஸ்ரியாவின் கணவா் பஹத் பாசிலின் நடிப்பு தமிழ் ரசிகா்களுக்கு மிகவும் பிடித்து விட்டது. அவருக்கு மலையாளத்தில் அதிக படங்கள் கைவசம் இருப்பதால் கால்ஷூட் இல்லாத காரணத்தால் இந்த படத்திலிருந்து அவா் விலகி கொண்டார்.

அருண் விஜய்க்கு பஹத் பாசிலால் தான் அதிஷ்டகாற்று வீசியுள்ளது. அருண் விஜய்க்கு நீண்ட நாளாக மணிரத்னம் படத்தில் நடிக்கவேண்டும் என்ற ஆசை இதனால் நிறைவேறியுள்ளது. இந்த படத்தில் ஜோதிகா, அதிதி ராவ் ஹைதரி, ஐஸ்வர்யா ராஜேஷ்,பிரகாஷ்ராஜ், தியாகராஜன், மன்சூா் அலிகான்ஈ ஜெயசுதா உள்ளிட்ட பெரிய நட்சத்திர கூட்டம் உள்ளது. இந்த படத்தை ஜூன் மாதத்திற்குள் படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது. இதன் படப்பிடிப்பு இந்தியா. துபாய் உள்ளிட்ட இடங்களில் நடைபெறவிருக்கிறது. வைரமுத்து பாடல்கள் எழுத ஏ.ஆா். ரஹ்மான் இசையமைத்துள்ளார்.