மிஸ்டர் லோக்கல் திரைப்படம் எதிர்மறை விமர்சனங்களைப் பெற்று வருவதை அடுத்து சிவகார்த்திகேயனை மீண்டும் சீண்டியுள்ளார் நடிகர் அருண் விஜய்.

சிவகார்த்திகேயனின் சீமராஜா படத்தின் டிரைலர் வெளியான போது நடிகர் அருண் விஜய்யின் டிவிட்டரில் இருந்து வந்த கமெண்ட் தமிழ் சினிமா ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. அதில் ‘ யார் யாரெல்லாம் மாஸ் காட்டுவது என்று விவஸ்தை இல்லாமல் போய்விட்டது. உண்மையானவர்களை தமிழ் மக்களுக்கு தெரியும்’ எனக் கூறப்பட்டு இருந்தது.

இதையும் படிங்க பாஸ்-  நயன்தாராவை கெஞ்சி கூத்தாடி போர்ச்சுக்கல் நாட்டிற்கு அழைத்து சென்ற நடிகர்

ஆனால் அடுத்த சில நாட்களில் எனது டிவிட்டர் அக்கவுண்ட் ஹேக் செய்யப்பட்டு விட்டது என அருண் விஜய் கூறினார். அதையடுத்து அப்போது சர்ச்சைகள் ஓய்ந்தன. இப்போது மிஸ்டர் லோக்கல் படம் ரிலிஸாகி மோசமான விமர்சனங்களைப் பெற்று வருகிறது. சிவகார்த்திகேயனின் கேரியரில் மிக மோசமான படமாக இருக்கும் என ரசிகர்கள் கூறிவருகின்றனர்.

இதையும் படிங்க பாஸ்-  சிவாவின் வேலைக்காரன் ரிலீஸ் தேதி அறிவிப்பு

இப்போது அருண் விஜய் தனது டிவிட்டரில் வாயை மூடிக்கொண்டு சிரிக்கும் ஸ்மைலி ஒன்றைப் போட்டுள்ளார். அதனால் மீண்டும் சிவகார்த்திகேயனை வம்பிழுத்துள்ளார் அருண் விஜய் என கோலிவுட் ரசிகர்கள் கருத்துத் தெரிவிக்க ஆரம்பித்துள்ளனர்.