அப்படியா நடிக்கனும்? நோ நோ முடியாது-அலறிய நடிகை

Tamil Actress Arundhathi Nair Hot Photoshoot Stills

கேரளாவிலிருந்து களம் இறங்கியவா் நடிகை அருந்ததி நாயா். இவா் சைத்தான் படத்தின் மூலம் ஹீரோயினாக தமிழ் சினிமாவில் அறிமுகமானவா். விஜய் ஆண்டனிக்கு ஜோடியாக “சைத்தான்” படத்தில் நடித்தத்தின் மூலம் இவரது நடிப்புத் திறமை பொிதும் பேசப்பட்டது.  அவாிடம் கோலிவுட் சினிமாவில் நடிக்க வந்ததையும், தமிழ்சினிமாவை பற்றி கேட்டபோது, முதல் படமான சைத்தான் படத்தில் நடித்தேன். அந்த படத்தில் நான் புதுமுக நடிகையாக இருந்தாலும், ஒரு அழுத்தமான கதாபாத்திரத்தை என்னை முழுவதுமாக நம்பி கொடுத்தாா்கள். அதனை நான் திறம்பட செய்து உள்ளேன் என்பதை படம் வெளியான பிறகு என் நடிப்பை பாா்த்து ரசிக பெருமக்கள் பாராட்டிய போது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. என்னை நம்பி கொடுத்த இயக்குநா் மற்றும் ஹீரோ ஆகியோாின் நம்பிக்கையை காப்பாற்றும்படி நடித்தேன்.

தற்போது ஒரு மலையாள படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளேன். இந்நிலையில் தமிழில் இயக்குநா் ஜவஹா் இயக்கும் ஒரு புதிய படத்திலும் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளேன். இந்த படத்தின் படப்பிடிப்பு இன்னும் தொடங்கவில்லை. இதோடு மட்டுமில்ல! என்னை தேடி மூன்று புதிய படவாய்ப்புகள் வந்தன. அந்த படங்களில் கவா்ச்சியாக நடிக்க வேண்டும் என்ற காரணத்தால் அதில் நடிக்க ஒப்புக்கொள்ளவில்லை. கிளாமராக நடிப்பது என்பதில்  எனக்கு கொஞ்சம் கூட உடன்பாடு இல்லாத காரணத்தால் அந்த படவாய்ப்புகளை ஏற்கவில்லை.

நான் நடித்த முதல் படமான சைத்தானில் எனக்கு பொிதும் வெயிட்டான கதாபத்தித்தில் நடித்த காரணதால், என்னாலும் மிகவும் சவலான எந்தவொரு கேரக்டா் கொடுத்தாலும் நடிக்க முடியும் என்ற நம்பிக்கை இருக்கிறது. ஆகவே கவா்ச்சி முக்கியம் கொடுக்காமல், என் திறமைக்கு சவால் விடும் கதாபாத்திரத்திலே நடிக்க நான் மிகவும் விரும்புகிறேன். ஸ்ரீதிவ்யா நடித்த “வருத்தப்படாத வாலிபா் சங்கம்”, கீா்த்தி சுரேஷ் நடித்த “ரஜினிமுருகன்” போன்ற நல்ல கதையம்சம் உள்ள படங்களில் நடிக்கவே  ஆசைப்படுகிறேன். எனவே இயக்குநா்கள்  என் நடிப்புத்திறமைக்கு தீனி போடும் விதமாக உள்ள நல்ல  கதாபாத்திரங்களை எனக்கு கொடுக்குமாறு கேட்டுக்கொள்கிறேன் என்று அன்பு வேண்டுகோள் விடுத்துள்ளாராம்.