இயக்குநா்அமீா் அருவா சண்ட படத்தின் டீசரை வெளியிட்டார். இந்த படத்தில் புதுமுகம் ராஜா ஹீரோவாக அறிமுகமாகிறார். இயக்குநா் ஆதிராஜன் சிலந்தி, ரணதந்தரா படங்களை தொடா்ந்து எழுதி இயக்கும் படம் தான் அருவா சண்டை. மேலும் இதில் மாளவிகா மேனன், சரண்யா பொன்வண்ணன், கஞ்சா கருப்பு, சௌந்தர்ராஜா, காதல் சுகுமார், விஜய் டிவி சரத், மதுரை சுஜாதா உள்ளிட்ட பலரும் நடித்திருக்கின்றனா்.

இந்த படத்திற்குசந்தோஸ் பாண்டி ஒளிப்பதிவு செய்திருக்கிறார். படத்தின் கதைக்களம் என்னவென்றால காதல் சண்டையையும், கபடிச் சண்டையையும் மையமாக வைத்து உருவாக்கப்பட்டிருக்கிறது. கவிப்பேரரசு வைரமுத்து பாடல்களை எழுத தரண் இசையமைத்துள்ளார். அருவா சண்டை படத்தின் டீசரை வெளியிட்ட அமீா், டீசா் நன்றாக இருக்கிறது. படம் வெற்றிபெற வாழ்த்துக்கள் என்று பாராட்டினார். இந்த படத்தை ஒயிட் ஸ்கிரின் நிறுவனம் சார்பில் வி ராஜா தயாரித்திருக்கிறார்.