நேற்று வெளியான ‘அருவி’ திரைப்படம் மிகப்பெரிய வரவேற்பை பெற்று வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடி வருகின்றது

இந்த நிலையில் இந்த படத்தில் விஜய்யை கலாய்த்து ஒரு வசனம் வருகிறது. தொலைக்காட்சி ஊழியர்களை பணயக்கைதியாய் பிடித்து வைத்திருக்கும் ஹீரோயின் ஆதித்யபாலன், ‘நண்பன்’ படத்தை நடித்து காட்டுமாறு ஒருவரையும், அதை கண்டுபிடிக்க வேண்டும் என்று இன்னொருவரையும் கூறுவார்.

இந்த நிலையில் விஜய் படம் என்றும், நல்ல படம் என்றும் அந்த நபர் குறிப்பு கொடுத்தபோது விஜய் நடித்த நல்ல படமா? அது எது? என்று விஜய்யை கலாய்த்து ஒரு வசனம் வருகிறது. இந்த வசனத்தின்போது தியேட்டரே அதிர்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.