சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருக்கும் ‘அருவி’ படத்தை பலரும் கொண்டாடி வரும் நிலையில் விஜய் ரசிகர்களை மட்டும் இந்த படம் ஆத்திரப்படுத்தியுள்ளது.

இந்த படத்தில் ‘விஜய் நடித்த நல்ல படமா? என்று ஒரு பெண் கேரக்டர் வசனம் பேசுவார். இந்த வசனம் விஜய் ரசிகர்களை காயப்படுத்தியுள்ளதால் இயக்குனரை விஜய் ரசிகர்கள் டுவிட்டரில் திட்டி வருகின்றனர்

இந்த நிலையில் இதுகுறித்து விளக்கம் அளித்த இயக்குனர் அருண் பிரபு, ‘”படம் முழுவதும் பலரையும் விமர்சிக்கும் வகையில் பல வசனங்கள் இருக்கும், அந்த வகையில் தான் இந்த சீனையும் யோசித்தேன். வேண்டுமென்றே விஜய்யை விமர்சிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் அதை யோசிக்கவில்லை” என்று கூறியுள்ளார்.