கடந்த வாரம் வெளியான அருவி’ திரைப்படத்தை உலகத்தமிழர்களே பாராட்டி வரும் நிலையில் விஜய் ரசிகர்கள் மட்டும் அந்த படத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

‘விஜய் எந்த நல்ல படத்தில் நடித்திருக்கிறார்’ என்ற ஒரே ஒரு வசனம் தான் இந்த எதிர்ப்புக்கு காரணம். மேலும் விஜய் ரசிகர்கள் இந்த படம் எகிப்து நாட்டின் படம் ஒன்’றை காப்பி அடித்து எடுத்ததாகவும் வதந்தியை பரப்பி வருகின்றனர்.

இதையும் படிங்க பாஸ்-  சக நடிகைக்கு லிப்கிஸ் கொடுத்த பிரபல நடிகை ஓரினச்சேர்க்கையாளரா?

இந்த நிலையில் அருவி படத்தின் தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு நேற்று தனது டுவிட்டரில் வருத்தம் தெரிவித்து ஒரு பதிவு செய்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது: அருவி – இது அன்பை, மனிதத்தை பறைசாற்றும் நோக்கில் மட்டுமே எடுக்கப்பட்ட படம். யார் மனதையும் புண்படுத்தும் நோக்கில் எடுக்கப்பட்டதல்ல. இருந்தும், யாராவது காயப்பட்டிருந்தால் எங்கள் வருத்தத்தை தெரிவித்துக்கொள்கிறோம்! என்று கூறியுள்ளார்

இதையும் படிங்க பாஸ்-  நயன்தாராவின் சிலையை நான் திறக்கிறேன்: இயக்குனர் வசந்தபாலன்

விஜய்யிடமும், விஜய் ரசிகர்களிடமும் தான் மறைமுகமாக தயாரிப்பாளர் வருத்தம் தெரிவித்ததாக கூறப்படுகிறது