நயன்தாராவுக்கு கிடைக்காதது அமலாபாலுக்கு கிடைக்கவில்லையே! அதிர்ச்சியில் படக்குழு

மம்முட்டி, நயன்தாரா நடிப்பில் கடந்த 2015ஆம் ஆண்டு மலையாளத்தில் வெளிவந்த வெற்றிப்படம் ‘பாஸ்கர் தி ராஸ்கல்’. இந்த படத்தை தமிழில் ‘ப்ரெண்ட்ஸ் உள்பட ஒருசில படங்களை இயக்கிய சித்திக் இயக்கியிருந்தார்

இந்த படம் ‘பாஸ்கர் ஒரு ராஸ்கல் என்ற தலைப்பில் தமிழில் ரீமேக் செய்யப்பட்டுள்ளது. அரவிந்தசாமி, அமலாபால் நடித்த படத்தை தமிழிலும் சித்திக் இயக்கியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இந்த படத்திற்கு ‘யூஏ’ சான்றிதழை தணிக்கை அதிகாரிகள் வழங்கியுள்ளனர். ஆனால் மலையாள படமான ‘பாஸ்கர் தி ராஸ்கல்’ படத்திற்கு யூ சான்றிதழ் வழங்கியிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது