உலக நாயகன் கமல்ஹாசன் இன்று தனது புதிய அரசியல் கட்சியின் பெயரை அறிவிக்கவுள்ளார். மதுரை ஒத்தக்கடையில் நடைபெறவுள்ள பிரமாண்டமான பொதுக்கூட்டத்தில் தனது கட்சியின் பெயர், கொள்கைகளை அறிவித்துவிட்டு, கட்சியின் கொடியையும் ஏற்றி சிறப்புரை ஆற்றவுள்ளார்

இந்த நிலையில் இந்த கூட்டத்திற்கு இரண்டு முதல்வர்கள் கலந்து கொள்ளவிருப்பதாக செய்திகள் வெளிவந்துள்ளது. ஒருவர் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், இரண்டாமவர் கேரள முதல்வர் பினராயி விஜயன். இருவருமே பாஜக எதிர்ப்பாளர்கள் என்பது குறிப்பிடத்தக்கது

இவர்கள் மட்டுமின்றி மேலும் சில முன்னாள் ஐஏஎஸ் , ஐபிஎஸ் அதிகாரிகளும் இன்றைய கமல் கட்சி கூட்டத்தில் கலந்து கொள்ளவிருப்பதாக கூறப்படுகிறது.