சின்னத்திரை தொகுப்பாளினி என்றால் அது நம்ம டிடி என்ற திவ்யதர்ஷினி தான். இவருடைய கலகலப்பான பேச்சுக்குகென்றே ஒரு ரசிக கூட்டம் இருக்கிறது. மற்ற தொகுப்பாளர்களுக்கு முன் மாதிரி இருக்கக் கூடியவா். பிற தொகுப்பாளா்களிடம் உங்க ரோல் மாடல் யாரு என்றால் உடனே சொல்லுவது டிடி அக்கா தான் என்று அந்தளவுக்கு பிரபலமான டிடி, வீடியோ பாடல் ஒன்றில் நடித்துள்ளார்.

காதலர் தினத்தின் ஸ்பெஷலாக டிடி நடிப்பில் உலவிரவு என்ற பாடல் வீடியோவில் வெளியாகியது. இந்த பாடலில் டிடியுடன் ரொமான்ஸ் செய்து நடித்தவா் மலையாள நடிகா் டோவினோ தாமஸ். இதை கௌதம் மேனன் தன்னுடைய யு டியூப் சேனலான ஒன்றாக என்டா்டெயின்மென்ட்டை மூலம் வெளியிட்டுள்ளார். இதன் மூலம் ஏற்கனவே லெட்சுமி, மா என்ற இரு குறும்படங்களை வெளியிட்டுள்ளார். லட்சுமி குறும்படம் மிகப்பெரிய பரபரப்பையை ஏற்படுத்தியது. அதுபோல மா குறும் படமானது பத்தாம் வகுப்பு மாணவியின் கர்ப்பம் பற்றியதாக அமைந்து தாக்கத்தை ஏற்படுத்தியது. இவா் குறும்படங்கள் மட்டுமின்றி தனி இசைப்பாடல்கள் அடங்கிய வீடியோக்களையும் தன்னுடைய யுடியூப் சேனல் மூலம் தற்போது வெளியிட ஆரம்பித்துள்ளார்.

உலவிரவு பாடல் வீடியோவானது அருமையாக இருக்கிறது. இந்த பாடலை மதன் கார்க்கி எழுதியிருக்கிறார்.இசையை கார்த்திக் அமைந்துள்ளார். டிடி நடித்துள்ள இந்த பாடல் ரசிகா்களின் ஏகோபித்த வரவேற்பை பெற்றதோடு நிற்காமல், இந்த பாடலை பிரபல நடிகா் ஒருவா் பாராட்டியுள்ளார். டிடியின் நடிப்பை பற்றியும், அவர் செய்துள்ள் ரொமான்ஸ் பற்றியும் மனதார பாராட்டி இருக்கிறார் நடிகா் ஆா்யா. தன்னை பாராட்டிய ஆா்யாவுக்கு நன்றி தெரிவித்ததோடு ரொமான்ஸ் பற்றி நீங்க பாராட்டுவது எனக்கு மிக்க மகிழ்ச்சியாக இருக்கிறது என்று பதிலளித்துள்ளார்.

டிடியின் வீடியோ ஆல்பம்  பாடலை பார்த்து என்ன இப்படி நடித்துள்ளார் என்று அவரது ரசிகா்கள் குசலம் விசாரித்து வருகிறார்கள்.