மலேசியாவில் கோலிவுட் திரையுலக நட்சத்திரங்களின் கிரிக்கெட் போட்டி நடந்து வருகிறது. இந்த போட்டியில் நடிகர்கள் விறுவிறுப்புடன் விளையாடி வருகின்றனர்.

இந்த நிலையில் கிரிக்கெட் மைதானத்தில் பீல்டிங் செய்து கொண்டிருக்கும் நடிகர்கள் அனைவரும் மும்முரமாக பீல்டிங் செய்து கொண்டிருக்க காதல் மன்னன் ஆர்யா மட்டும் மைதானத்தில் எல்லையில் உட்கார்ந்து வேடிக்கை பார்த்து கொண்டிருந்த நடிகைகளிடம் கடலை போட்டு கொண்டிருந்தார். அவர் பக்கம் பந்து வரவில்லை என்பதால் அவர் இவ்வாறு செய்ததாக கூறப்படுகிறது.

இதுகுறித்த புகைப்படம் இணையதளத்தில் கசிந்தவுடன் நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர். ‘பாஸ், இந்த பக்கம் திரும்பி உட்காருங்கள்’ என்பது போன்ற வாசகங்களுடன் மீம்ஸ்களை வெளியிட்டு தள்ளி வருகின்றனர் நெட்டிசன்கள்