ஆர்யா நடிப்பில் வெளியான படங்கள் கடந்த சில ஆண்டுகளாக எதிர்பார்த்த வெற்றியை பெறாத நிலையில் அவர் தற்போது ‘இருட்டு அறையில் முரட்டு குத்து பட இயக்குனர் இயக்கிய ‘கஜினிகாந்த் என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படம் ரிலீசுக்கு தயாராகியுள்ள நிலையில் இந்த படத்தின் தணிக்கை தகவல் வெளிவந்துள்ளது.

இதையும் படிங்க பாஸ்-  ஜூங்கா படம் சூப்பர்: பார்த்தவர்கள் பாராட்டு

இந்த படத்திற்கு தணிக்கை அதிகாரிகள் ‘யூ’ சான்றிதழ் கொடுத்துள்ளனர். இந்த படத்தின் இயக்குனர் இதற்கு முன்னர் இயக்கிய இரண்டு படங்களும் ‘ஏ’ சான்றிதழ் பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

ஆர்யா, சாயிஷா, கருணாகரன், சதீஷ், காளி வெங்கட், ராஜேந்திரன், சம்பத் ராஜ், ஆடுகளம் நரேன் உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு பாலமுராளி பாலு இசையமைத்துள்ளார். ஸ்டுடியோக்ரீன் ஞானவேல்ராஜா தயாரித்துள்ள இந்த படம் மிக விரைவில் ரிலீசாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.