Arya wedding reception : நடிகர் ஆர்யாவுக்கும், நடிகை சாயிஷாவுக்கும் கடந்த 10ம் தேதி ஹைதராபாத்தில் திருமணம் நடைபெற்றது. அதில் இரு குடும்ப உறுப்பினர்கள் மட்டுமே கலந்து கொண்டனர்.

இந்நிலையில், சென்னை அண்ணாசாலையில் உள்ள ஒரு நட்சத்திர ஹோட்டலில் திருமண வரவேற்பு நடைபெற்றது. இதில், இயக்குனர் விஜய், நடிகர் பரத், சாந்தனு உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

அதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய ஆர்யா “சாயிஷா எனக்கு மனைவியாக அமைந்தது மகிழ்ச்சி. கஜினிகாந்த் படத்தில் நடித்த போது எங்கள் இருவருக்கும் இடையே ஒரு ஈர்ப்பு ஏற்பட்டது. அதன் பின் காப்பான் படப்பிடிப்பில் எங்கள் இருவரின் நட்பை பார்த்து, எங்கள் இரு குடும்பத்தினர் திருமண ஏற்பாட்டை செய்தனர். என் பெற்றோருக்கு பிடித்த பெண்ணையே திருமணம் செய்தது மகிழ்ச்சியாக இருக்கிறது. திருமணத்திற்கு நடிப்பது சாயிஷாவின் சொந்த முடிவு. அவருக்கு முழு சுதந்திரத்தையும் கொடுத்து விட்டேன்” என அவர் தெரிவித்தார்.