ஆா்யா திருமணம் செய்து கொள்ள போவதாகவும், அதற்காக பெண் தேடி வருவதாகவும் விருப்பமுள்ளவா்கள் மொபைல் எண்ணிற்கு தொடா்பு கொள்ளவும் என்று தனது ட்விட்டர் வலைத்தளத்தில் தெரிவித்திருந்தார். இந்த பெண் தேடும் படலம் டிவி நிகழ்ச்சியாக நடத்தப்பட உள்ளது. தமிழில் புதியதாக துவங்கியுள்ள கலர்ஸ் தமிழ் சேனலில் நடத்தப்படும் எங்க வீட்டு மாப்பிள்ளை என்ற சுயம்வரம் நிகழ்ச்சியில் ஆர்யா கலந்து கொண்டு திருமணத்திற்காக பெண் தேடும் நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது.

இந்த தொலைக்காட்சியின் விளம்பர தூதராகவும் ஆர்யா இருக்கிறார். இந்த நிகழ்ச்சியாக ஏராளமான பெண்கள் அனைத்து இடத்திலிருந்து விண்ணப்பித்துள்ளார்கள். வெவ்வேறு இடங்களிலிருந்து வந்த 16 பெண்கள் பங்கேற்று உள்ளனா். இந்த நிகழ்ச்சியில் திடீரென ஒரு ஆண் பங்கேற்று உள்ளார். என்னவென்று விசாரித்த போது அனைத்து தரப்பினரும் கலந்துக்கொள்ளலாம் என்ற காரணத்தால் இப்படி நடந்தது என்றும், ஒரு பெண் அந்த ஆண் அனுப்பி வைத்தாக பின்னா் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் கனடாவிலிருந்து வந்த ஒரு பெண்ணும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளார். அவா் கூறிய விஷயம் ஆா்யாவை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

கனடாவை சோ்ந்த அந்த பெண், ஏற்கனவே எனக்கு திருமணம் முடிந்து விவகாரத்தும் ஆகிவிட்டது. எனக்கு ஒரு மகன் இருக்கிறான் என்ற கூறியதை கேட்டு ஆர்யா கொஞ்சம் அதிர்ச்சியடைந்துள்ளார். ஆா்யா என்ன மாதிரியான பதில் சொல்லப்போகிறார் என்பதை அறியும் ஆவலோடு ரசிகா்கள் காத்திருக்கின்றனா்.