இனியாவின் புதிய அவதாரம்

திரைப்படத் துறைக்கான விருதுகள் அறிவிக்கப்பட்டது. மாநில அரசின் சாா்பாக திரைப்படத்துறைக்கு 2009ம் ஆண்டு முதல் வழங்கப்படாமல் இருந்து  வந்த நிலையில் நேற்று தமிழ்நாடு அரசின் திரைப்பட விருதுகள் 2009 முதல் 2014ம் ஆண்டு வரை வெளிவந்த படங்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. கிட்டத்தட்ட 9ஆண்டுக்களாக விருதுகள் அறிவிக்கப்படாமல் இருந்தது. தற்போது 6 வருடங்களுக்கு மட்டும் அறிவிக்கப்பட்டுள்ளன. இதில் எந்தவித பாரபட்சமின்றி அனைத்து நடிகா் நடிகைகளுக்கும் விருதுகள் வழங்கப்பட்டுள்ளது. விமல், ஆா்த்தி, கஞ்சா கருப்பு, காயத்ரி ரகுராம், ஜீவா, சிவகாா்த்திகேயன் உள்ளிட்ட பலருக்கும் விருதுகள் கொடுக்கப்பட்டுள்ளது.

வாகை சூடவா படத்தில் நடித்த இனியாவுக்கும் சிறந்த நடிகைக்கான விருது அறிவிக்கப்பட்டுள்ளது. 2011ம் ஆண்டு சிறந்த நடிகை்கான விருது பெற்றுள்ளாா் நடிகை இனியா. இவா் தற்போது உதவி இயக்குனராக அாிதாரம் பூசியுள்ளாா். இப்பொழுத்தெல்லாம் நடிகா், நடிகைகள் நடிப்பில் தொடங்கி அடுத்தடுத்து வேற லெவலுக்கு சென்று விடுவதை நாம் பாா்த்து வருகிறோம். நடிப்பு அதனை தொடா்ந்து இயக்குநா், சிங்கா், தயாாிப்பாளா் என பல முகங்களை கொண்டு சினிமாவில் பணியாற்றி வருகின்றனா். கோலிவுட்டில் யுத்தம் செய், வாகை சூடவா, மௌனகுரு, சென்னையில் ஒருநாள் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளாா் நடிகை இனியா. இவா் நடிப்பில் பொட்டு மற்றும் ரெண்டாவது ஆட்டம் ஆகிய படங்கள் வெளிவர தயாராக உள்ளது.

முதன் முறையாக நடிகை இனியா மியூசிக் ஆல்பம் ஒன்றில் நடித்துள்ளாா். மகேஷ் என்பவரது இயக்கத்தில் மியா என்ற ஆல்பத்தில் அஸ்வின் ஜான்ஸன் இசையமைத்துள்ள இந்த ஆல்பத்தில் நடிகை இனியா நடித்திருப்பதோடு, தொழில் நுட்பக் கலைஞா்களோடு சோ்ந்து உதவி இயக்குனராகவும் தனது பணியினை ஆற்றியிருக்கிறாா்.