கூகை திரைப்பட இயக்கம் ஏற்பாடு செய்திருந்த “96” படக்குழுவினரின் உதவி இயக்குநர்களுடனான கலந்துரையாடல் கூகை நூலகத்தில் நடைபெற்றது.

இந்த கலந்துரையாடலில் நடிகர் விஜய் சேதுபதி, இயக்குநர்கள் பிரேம் குமார், வசந்தபாலன், எழுத்தாளர்கள் வாசுகி பாஸ்கர், தமிழ் பிரபா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

இந்த கலந்துரையாடலில் நடிகர் விஜய் சேதுபதி பேசுகையில்,

“இங்கு நிறைய உதவி இயக்குநர்கள் இருப்பீர்கள் நினைக்கிறேன். உங்களுக்கு ஒன்று சொல்கிறேன். ஒருவரிடத்தில் நீங்கள் கதை சொல்வது மிகவும் முக்கியம்.

கேட்கும் நபருக்கு புரியாவிட்டாலும் கூட, அவர்களுக்கு புரியும் படியாக கதை சொல்ல வேண்டும். ’96’ திரைப்படத்திற்குள் நான் மட்டுமல்ல ஒட்டுமொத்த குழுவும் வருவதற்குக் காரணம் இயக்குநர் பிரேம் எங்களிடம் கதை சொன்ன விதம் தான்.

அதே போல நமக்கு ஒரு விசயம் கிடைக்காமல் போனால், அடுத்தவர் மீது பழிபோடுவதைத் தவிர்க்க வேண்டும்.

நாம் நினைத்ததை அடைய என்ன செய்ய வேண்டும் என்பதில் மட்டுமே கவனம் செலுத்த வேண்டும். மற்றவர்கள் என்ன சொல்கிறார்கள் என்பதையும் கவனத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும்” என தெரிவித்தார்