சில நாட்களாக சமூக வலைதளங்களில் பிரபலமாக இருந்து வரும் ஜோதிடர் பாலாஜி ஹாசன் ரஜினி பற்றி சொன்ன கருத்தால் சர்ச்சையில் சிக்கியுள்ளார்.

உலகக்கோப்பை கிரிக்கெட் முடிவை சரியானக் கணித்து சொன்னதாகக் கூறப்படும் பிரபல ஜோதிடர் பாலாஜி ஹாசன் அதன் பிறகு சமூகவலைதளங்களில் பிரபலமாகி வருகிறார். இந்நிலையில் அவர் ரஜினி, கமல், விஜய், அஜித் ஆகியோரின் அரசியல் வருகை மற்றும் வெற்றி பற்றிக் கூறினார்.

அதில் ரஜினியைப் பற்றிக் கூறும்போது ‘ரஜினி அரசியல் அறிவிப்பு வெளியிட்டு கிட்டத்தட்ட 2 வருடம் ஆகிறது. ஆனால், இதுவரை எதுவும் ஆக்கப்பூர்வமாக செய்யவில்லை. 2021ம் ஆண்டு தேர்தல் நேரத்தில் அரசியல் கட்சி தொடங்குவார். ஆனால், மக்களிடம் பெரிய ஆதரவு ஒன்றும் இருக்காது. அதன் பிறகு 2024ல் அவருக்கு உடல் ரீதியாக பிரச்சனைகள் வரக்கூடும். அதிலிருந்து எப்படி மீண்டு வருகிறார் என்பதை பொறுத்துத்தான் அவரது அரசியல் பிரவேசம் இருக்கும்’ எனக் கூறினார்.

இதனால் ரஜினி ரசிகர்களும் ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகளும் அதிருப்தியடைந்துள்ளனர். அடுத்து வரும் சட்டமன்ற தேர்தலில் திமுகவுக்கும் ரஜினிக்கும்தான் போட்டி என அனைவரும் கூறிவரும் நிலையில் இந்தக் கணிப்பால் அனைவரும் அவர் மேல் கோபமாகியுள்ளனர். மேலும் பாலாஜி ஹாசன் திமுக தலைவர் துர்கா ஸ்டாலினுக்கு மிகவும் நெருக்கமானவர் எனவும் அவரது பேச்சைக் கேட்டுதான் பாலாஜி ஹாசன் வேண்டுமெனவே இப்படி சொல்லி இருக்கிறார் எனவும் குற்றம் சாட்டியுள்ளனர்.