இளம் கதாநாயகர்களில் மிக புகழ்பெற்றவர் பிரசாந்த் 90களின் ஆரம்பத்திலேயே வைகாசி பொறந்தாச்சு படம் மூலம் திரைக்கு வந்த பிரசாந்த், தொடர்ந்து கிழக்கே வரும் பாட்டு, செம்பருத்தி, கண்மணி, ராசாமகன், ஆணழகன் என தொடர்ந்து நடித்து மக்கள் மனதில் இடம் பிடித்தார்.

பிரமாண்ட இயக்குனர் என அறியப்பட்ட பரபரப்பின் உச்சத்தில் இருந்த காலகட்டத்தில் ஐஸ்வர்யா ராய் உலக அழகியாக பரபரப்பாக அறியப்பட்ட காலத்தில், சங்கர் இயக்கிய ஜீன்ஸ் திரைப்படம் பிரசாந்துக்கு மிகப்பெரிய வெற்றியையும் சாக்லேட் பாய் அந்தஸ்தையும் கொடுத்தது.

2002ல் ஹரி இயக்கிய தமிழ் படம் பிரசாந்துக்கு மட்டுமல்லாது படத்தை இயக்கிய ஹரிக்கும் மிகப்பெரும் திருப்புமுனையாக அமைந்தது.

அதன் பிறகும் தொடர்ந்து இன்று வரை படங்களில்  நடித்து வரும் பிரசாந்துக்கு நீண்ட நாட்களாக ஒரு திருப்புமுனை படம் அமையாமல் இருக்கிறது.

இதற்கு முன் பிரசாந்த் நடித்து வெளிவந்த சாகசம் திரைப்படம் நன்றாக திரைக்கதை அமைக்கப்பட்டு வந்து ஓரளவு வெற்றியை பெற்றது. இருப்பினும் பெரிய ப்ரேக் அமையவில்லை.

பிரசாந்துக்கு திருப்புமுனை ஏற்படுத்தும் பொருட்டு அவர்களின் ஸ்டார் மூவிஸ் சார்பில் அவரது தந்தை தியாகராஜன் பெரும் பொருட்செலவில் தயாரித்து வரும் படம் ஜானி ,வித்தியாசமான காட்சிகளுடன் ஒரு அதிரடி படமாக ஜானி உருவாகி வருகிறது.

இந்நிலையில் ஜானி படத்தில் மிகப்பெரும் ஒரு முக்கியத்துவம் வாய்ந்த ரோலில் ஹிந்தி நடிகர் அசுதோஷ் ராணா நடித்துள்ளார். வித்தியாசமான பல ரோல்களை ஏற்று நடிக்கும் அசுதோஷ் ராணா தமிழில் ஏற்கனவே வேட்டை, மொட்ட சிவா கெட்ட சிவா, தமிழ்செல்வனும் தனியார் அஞ்சலும் போன்ற திரைப்படங்களில் நடித்துள்ளார்.

இப்படத்தில் இவரின் ரோல் மிகவும் பேசப்படும் வித்தியாசமான ரோலாக அசாதரணமான ரோலாகவும் இருக்கும் என படத்தயாரிப்பாளரும் பிரசாந்தின் தந்தையுமான நடிகர் தியாகராஜன் கூறியுள்ளார்.